அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்


அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்
x

திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. பட்டியலின பிரிவு சார்பில் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியலின பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் எம்.குப்புசாமி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றது. அந்த நிதியை தமிழகத்தில் முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதாகவும், இதனால் பட்டியல் இன மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் வேறு திட்டத்திற்கு செலவு செய்ததாக தமிழக அரசை கண்டித்து மத்திய அரசு வழங்கும் பணத்தை முறையாக பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறி அம்பேத்கர் சிலையிடம் மனு அளித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் அன்பழகன், பொது செயலாளர்கள் கவியரசு, நகரத் தலைவர் சண்முகம், பட்டியல் அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் அணி நிர்வாகி வக்கீல் வீரமணி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story