பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன
3-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
கீழ்பென்னாத்தூர்
3-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
ஜமாபந்தி
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் 3-ம் நாளாக துரிஞ்சாபுரம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 161 மனுக்களை அவர் பெற்றார்.
இதில் உடனடி தீர்வு காணப்பட்டு 13 பேருக்கு நத்தம் வீட்டுமனை பட்டாைவ கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (நில அளவை) சுப்பிரமணியன், தாசில்தார் சுரேஷ், தனி தாசில்தார் அமுல், துரிஞ்சாபுரம் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம் உள்பட அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் கீழ்பென்னாத்தூர் வருவாய் உள்வட்ட கிராமங்களுக்கு இன்று 3-வது நாளாக ஜமாபந்தி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார்.
தாசில்தார் சக்கரை, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம், ஜமாபந்தி மேலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கீழ்பென்னாத்தூர் வருவாய் உள் வட்டத்தைச் சேர்ந்த 26 கிராமத்துக்கான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. அதில் பட்டாமாற்றம், உட்பிரிவுபட்டா மாற்றம், வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
கூடுதல் கட்டிடம்
அப்போது, கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் காலி இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதில் பிரச்சினை உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர செயலாளர் அன்பு, தலைமை ஆசிரியை சுமதி ஆகியோர் மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் வேணுகோபால் தலைமையிடத்து துணை தாசில்தார் அப்துல்ரவூப், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், தேர்தல் பிரிவு துணைத் தாசில்தார் மாலதி, தலைமையிட சர்வேயர் சாகுல்அமீது, துணைசர்வேயர் முனியன், வருவாய் ஆய்வாளர்கள் சுதா (கீழ்பென்னாத்தூர்) அல்லி (வேட்டவலம்), மகாலட்சுமி (சோமாசிபாடி) மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
செங்கம்
செங்கம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 3-வது நாள் நிகழ்ச்சி உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் இறையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட கொட்டகுளம், இறையூர், முத்தனூர், முடியனூர், மேல்முடியனூர், தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை உதவி கலெக்டரிடம் வழங்கினர்.
தாசில்தார்கள் முனுசாமி, ரேணுகா (சமூக பாதுகாப்பு திட்டம்) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷ்னாபீ, துணை தாசில்தார் தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் குணாநிதி, பரசுராமன், திருமலை, ராஜாராமன், கிருஷ்ணன், முருகன் உள்பட வருவாய்த்துறையினர், வனத்துறை, போக்குவரத்து துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.