போலீஸ் தேடிய 3 பேர் கைது


போலீஸ் தேடிய 3 பேர் கைது
x

பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் போலீஸ் தேடிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனா்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் போலீஸ் தேடிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனா்.

பெட்ரோல் குண்டு வீச்சு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆனை விழுந்தான் குளத்தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் (வயது 26). தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மாணவரணி பொதுச் செயலாளரான இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம மனிதர்கள் நள்ளிரவில் திடீரென பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர்பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் வீட்டுக் கதவில் இருந்த திரைச்சீலை மட்டும் எரிந்து சாம்பல் ஆனது. ஆனால் வீட்டில் இருந்த யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை.

3 பேர் கைது

இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆம்பல் தெற்கு பாலாயிகுடிக்காடு கிராமத்தை சேர்ந்த கவிக்குமார்(26), பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டையை சேர்ந்த முரளிதரன்(28), ஏனாதி மேலத்தெருவை சேர்ந்த ரங்கநாத்(26) ஆகிய 3 பேரையும் போலீசார் ைகது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story