மதுரையில் செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ஓட்டல் ஊழியர் கைது


மதுரையில்  செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ஓட்டல் ஊழியர் கைது
x

மதுரையில் செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரையில் செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஓட்டல் ஊழியர்

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் முகமது சலீம் (வயது 23). இவர் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்ல வில்லை. இந்த நிலையில் மீண்டும் நேற்று வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது ஓட்டல் அருகே செல்போன் கடை உள்ளது. அந்த கடைக்காரரிடம் முகமது சலீம் பேசும் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செல்போன் கடைக்காரர் முகமது சலீமை பார்த்து குடிபோதையில் வந்து தகராறு செய்வதாக கூறி அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.

பெட்ரோல் குண்டுவீச்சு

அனைவரின் முன்னிலையில் தன்னை அவமானம் செய்து விட்டதாக அவர் நினைத்தார். அதில் ஆத்திரம் அடைந்த முகமது சலீம் நேற்று மாலை 5.30 மணிக்கு அங்கு வந்தார். பின்னர் அவர் கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் தீ வைத்து அந்த கடை மீது வீசினார். அதில் கடையின் பெயர் பலகை எரிந்து கருகியது.

இது குறித்த தகவல் அறிந்தும் தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் மறைந்திருந்த முகமது சலீமை கைது செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story