பெட்ரோல் பங்க்கில் 100 லிட்டர் டீசல் திருட்டு
காவேரிப்பட்டணம் அருகே பெட்ரோல் பங்க்கில் 100 லிட்டர் டீசல் திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டீசல் திருட்டு
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அருகே பெட்ரோல் பங்க்கில் 100 லிட்டர் டீசல் திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டீசல் திருட்டு
போச்சம்பள்ளி தாலுகா தாமோதரஅள்ளி அருகே உள்ள தட்ரஅள்ளியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 44). பெட்ரோல் பங்க் உரிமையாளர். இவரது பெட்ரோல் பங்க்கில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (29), மணிகண்டன் (35), செல்வராஜ் (23) உள்ளிட்டோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் பெட்ரோல் பங்க்கில் 100 லிட்டர் டீசலை திருடி விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த உரிமையாளர் ராமமூர்த்தி காவேரிப்பட்டணம் போலீசில் ஒரு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே ஊழியர் தரப்பில் ராமகிருஷ்ணன் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தங்கள் 3 பேரையும், பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமமூர்த்தி தாக்கியதாக கூறியுள்ளார். மேலும் அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த புகார் குறித்தும் காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.