பெட்ரோல் பங்க் திறப்பு
கடையநல்லூர் அருகே பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடந்தது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சேர்ந்தமரம் ரோடு வலசையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், தேவி பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளருமான செல்லத்துரை தலைமை தாங்கினார். இந்தியன் ஆயில் நிறுவன மதுரை மண்டல அலுவலக துணை பொது மேலாளர் மகேஷ், மதுரை மண்டல அலுவலக சில்லறை விற்பனை மேலாளர் செந்தில்குமார், தென்காசி மாவட்ட சில்லறை விற்பனை மேலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார்.
செயற்குழு உறுப்பினர் செல்லத்துரையின் தந்தை மாடசாமி, தாய் ஆலிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்தனர்.
தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆனைகுளம் அப்துல்காதர் டீசல் பங்கை திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தென்காசி நகரமன்ற தலைவர் சாதிர், தென்காசி ஒன்றிய சேர்மன் ஷேக் அப்துல்லா, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், வடகரை பேரூராட்சி சேர்மன் ஷேக்தாவூத், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, துணை சேர்மன் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் ராதாகிருஷ்ணன், சுரண்டை தி.மு.க. நகர செயலாளர் ஜெயபாலன், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, கடையநல்லூர் நகராட்சி துணைத்தலைவர் ராசையா, யூனியன் சேர்மன் சுப்பம்மாள் பால்ராஜ், யூனியன் துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், சிங்கிலிபட்டி மணிகண்டன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டத் தலைவர் யாசர் கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சுமித்ரா நன்றி கூறினார்.