கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் திறக்க வேண்டும்- மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு


கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் திறக்க வேண்டும்- மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு
x

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.

கால்வாயில் உடைப்பு

கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்ததாவது:-

செண்பகபுதூர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கடந்த மாதம் 30-ந்தேதி உடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடைப்பை சரி செய்வதற்காக பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது. தற்போது வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக தண்ணீர் விடாததால் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் காய்ந்து வருகிறது. இதன் காரணமாக நெல் நடவு செய்த விவசாயிகள் கலங்கி உள்ளனர்.

சீரமைப்பு பணி

கீழ்பவானி வாய்க்கால் செயல் இழந்த நிலை பற்றி நீர்வளத்துறை தொடர்ந்து தெரிவித்து வந்தாலும், தமிழக அரசு சீரமைப்பு வேலைகளை திட்டமிட்டபடி செய்யாமல் காலம் தாழ்த்தியதே தற்போதைய நெருக்கடிக்கு காரணம். எனவே ஐகோர்ட்டு தீர்ப்பின்படி, போலீஸ் பாதுகாப்புடன் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.

தற்போதைய பாசன காலத்தில் 3 இடங்களில் பெரும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயின் பலவீனத்தால் வருகிற காலங்களில் இந்த கால்வாய் நீரை நம்பி பயிர் செய்ய இயலாது. எனவே அரசு திட்டமிட்டபடி கால்வாயில் சீரமைப்பு பணியை முழு அளவில் செய்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.


Related Tags :
Next Story