பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 123 பேர் கைது


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 123 பேர் கைது
x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 123 பேர் கைது

திருப்பூர்

திருப்பூர்,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை கண்டித்து திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அந்த அமைப்பை சேர்ந்த 123 பேரை போலீசார் கைது செய்தனர். மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்ததை கண்டித்தும், உடனடியாக அந்த தடையை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திருப்பூர் சி.டி.சி.கார்னரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்த திரண்டனர். மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.

அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தெற்கு போலீசார் 20 பெண்கள் உள்பட 53 பேரை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைத்தொடர்ந்து மேலும் ஆர்ப்பாட்டத்துக்கு சி.டி.சி. கார்னருக்கு வந்த அந்த அமைப்பை சேர்ந்த 10 பெண்கள் உள்ளிட்ட 43 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.

123 பேர் கைது

திருப்பூர் குமரன் சிலை முன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தனர். அதற்குள் அங்கிருந்த வடக்கு போலீசார் 27 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மொத்தம் 30 பெண்கள் உள்பட 123 பேரை கைது செய்தனர்.

முன்னதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் காங்கயம் ரோடு சி.டி.சி. கார்னர் பகுதியில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுபோல் ரெயில் நிலையம் முன், மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகள், மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.



Next Story