காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த மருந்தாளுனர்கள்


காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த மருந்தாளுனர்கள்
x

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கோரிக்கை அட்டை அணிந்து மருந்தாளுனர்கள் பணிபுரிந்தனர்.

சேலம்

சேலம் அரசு ஆஸ்பத்திரி மருந்தகத்தில் உள்ள மருந்தாளுனர்கள் நேற்று தங்களின் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, 'தமிழகம் முழுவதும் மருந்தாளுனர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்தபடி பணியில் ஈடுபட்டு உள்ளோம். எங்கள் கோரிக்கையை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என்றார்கள்.


Next Story