தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ம் கட்ட கலந்தாய்வு


தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ம் கட்ட கலந்தாய்வு
x

தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர்

தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வின் மூலம் பயிற்சியாளர்களின் சேர்க்கையினை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்களாவர். தகுதியானவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 50 ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். www.skilltraining.in.gov.in என்ற இணையதளம் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி

விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள், 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அரசு தொழில் பயிற்சி நிலைய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். விருதுநகர் 04562 294282, அருப்புக்கோட்டை 04566 225 800, சாத்தூர் 04562 290953 மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் விருதுநகர் 04562 294755. நடப்பு 2022-ம் ஆண்டில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சேர்க்கை ஆணை கிடைக்கப்பெறாதவர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. வருகிற 25-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story