இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு
இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு 22-ந் தேதி நடக்கிறது.
வேலூர்
சேர்க்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் ஆண்டிற்கான இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 3-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து பிற பாடங்களில் 400 மதிப்பெண்களுக்கு 279 முதல் 175 வரை பெற்றவர்களும், இளநிலை தமிழ் பாடப்பிரிவிற்கு 69 முதல் 45 வரையும், இளநிலை ஆங்கில பாடப்பிரிவிற்கு 59 முதல் 40 வரையும் மதிப்பெண் பெற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
4-ம் கட்ட கலந்தாய்வு 24-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இதில், ஆன்லைனில் விண்ணப்பித்து இதுவரை இடம்பெறாத மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த தகவலை சேர்க்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அனெட்ரெஜினா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story