தன்னார்வலர்களுக்கான 6-ம் கட்ட பயிற்சி
தன்னார்வலர்களுக்கான 6-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆண்டிமடம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 6-ம் கட்ட பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தொடங்கி வைத்தார். இதனை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா பார்வையிட்டு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். பயிற்சியில் சி.எஸ்.ஒ. ஒருங்கிணைப்பாளர் திருப்பதி மன மகிழ்ச்சி செயல்பாடுகளுடன் மாணவர்கள் ஈடுபட முழு ஈடுபாட்டுடன் தன்னார்வலர்கள் மையங்களை வழி நடத்திட வலியுறுத்தினார். வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சரவணன் மாணவர்கள் வருகை பதிவு குறித்து கருத்துகளை பகிர்ந்தார். கருத்தாளர்கள் தலைமை ஆசிரியர் மோகன்தாஸ், உதவி ஆசிரியர் ஜூலிமெட்டில்டா தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதேபோல் ஆண்டிமடம் வட்டார குறுவள மைய அளவில் பெரியதத்தூர், ஆண்டிமடம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அய்யூர், இலையூர், மருதூர் ஆகிய இடங்களிலும் இல்லம் தேடிக் கல்வி பயிற்சி நடைபெற்றது.