நெல்லையில் பூலித்தேவன் படத்துக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
நெல்லையில் பூலித்தேவன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
நெல்லையில் பூலித்தேவன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் அலுவலகம்
சுதந்திர போராட்ட வீரர் மன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீரான் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பூலித்தேவன் படத்துக்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், நிர்வாகி மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழர் அமைப்புகள்
நெல்லை மாவட்ட தமிழர் அமைப்புகள் சார்பில் பூலித்தேவன் பிறந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை மகாராஜா நகரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு பீட்டர், துரைசாமி தேவர், த.ம.ஜ.க. ஜமால், சாந்தி ஜாபர், அப்துல் அஜீஸ், நயினார், ஜோசப், த.ம.மு.க. நகர செயலாளர் மோகன் மள்ளர், பகுதி செயலாளர் முத்து உள்பட பல்வேறு தமிழர் அமைப்புகளை சார்ந்த பலர் கலந்து கொண்டு பூலித்தேவன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்துக்கு "மன்னர் பூலித்தேவர் மாளிகை" என பெயர் சூட்ட வேண்டும், கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு "மாவீரன் சுந்தரலிங்கனார் வளாகம்" என முன்பிருந்தது போல் மீண்டும் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.