தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி


தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி
x

தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அறியப்படாத 25 சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றுடன் கூடிய புகைப்பட கண்காட்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்வலெட் சுஷ்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியை அலுவலர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து சென்றனர்.


Next Story