தூக்குப்போட்டு போட்டோகிராபர் தற்கொலை
திட்டக்குடியில் தூக்குப்போட்டு போட்டோகிராபர் தற்கொலை செய்து கொண்டார்.
திட்டக்குடி
திட்டக்குடி வதிஷ்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ஜெயவேல் (வயது 34). அதே பகுதியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு வசந்தி என்கிற மனைவியும், ஜனனி என்கிற மகளும் உள்ளனர். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாக வில்லை. இதனால் கடந்த சில நாட்களாக ஜெயவேல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த ஜெயவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.