புகைப்பட கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை


புகைப்பட கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை
x

புகைப்பட கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருச்சி

திருச்சி சங்கிலியாண்டபுரம் கோவிந்த கோனார் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 25). புகைப்பட கலைஞரான இவர் தனது தொழிலை விரிவுப்படுத்த ரூ.80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக புகழேந்திக்கும், அவரது மனைவி சூர்யாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை விட்டு பிரிந்து சூர்யா தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த புகழேந்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story