வேன் மோதி போட்டோகிராபர் பலி
வேன் மோதி போட்டோகிராபர் பலி
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் ஆணியன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் சந்திரபிரகாஷ் (வயது 35). திருப்பூண்டியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்த இவர், நேற்று முன்தினம் இரவு போட்டோ ஸ்டுடியோவில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வேதாரண்யம் சாலையில் சென்ற போது எதிரே வேதாரண்யத்தில் இருந்து வேளாங்கண்ணியை நோக்கி சென்ற சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சந்திரபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திரபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்த புகாரின்பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.