புகைப்பட கலைஞர் தற்கொலை
புகைப்பட கலைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மகன் பாலமுருகன்(வயது 26). புகைப்பட கலைஞரான இவர் புகைப்படம் எடுக்கும் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தனது தாய் அன்னலெட்சுமியிடம் நேற்று முன்தினம் காலை திருச்சி சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அன்னலெட்சுமி செல்போன் மூலம் பாலமுருகனை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து அன்னலெட்சுமி அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்று பார்த்தார். யாரும் இல்லாத அந்த வீட்டில் பாலமுருகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.