உடற்கல்வித்துறை பொதுக்குழு கூட்டம்


உடற்கல்வித்துறை பொதுக்குழு கூட்டம்
x

உடற்கல்வித்துறை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வித்துறை பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகம் (பெரம்பலூர்), ஜெகநாதன் (வேப்பூர்) ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை பெரம்பலூர் கல்வி மாவட்டத்திற்கு வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியும், வேப்பூர் கல்வி மாவட்டத்துக்கு வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை லெப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி நடத்த உள்ளன. கூட்டத்தில் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story