உடற்கல்வி ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம்


உடற்கல்வி ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் உடற்கல்வி ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். மாநில தலைமை நிலைய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் குழந்தைவேலு, மாநில துணைச் செயலாளர் குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் ஜெயதேவன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் விளையாட்டு கோப்பைக்காண போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் பங்கு பெற நடவடிக்கை எடுத்த மாநில தலைமைக்கும், வாய்ப்பு அளித்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட விளையாட்டு அலுவலருக்கும் பாராட்டி நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.


Next Story