மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்


மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் லதா வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story