பயணிகள் நிழற்குடை கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல்
பயணிகள் நிழற்குடை கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
அறந்தாங்கி அருகே காயக்காட்டில் பயணிகள் நிழற்குடை கட்ட தனி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் பயணிகள் நிழற்குடை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று அவ்வழியாக வந்த பஸ்சை நிறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பயணிகள் நிழற்குடை கட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story