மக்கள் வசிக்கும் பகுதி வழியாக குப்பைகள் எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து மறியல்


மக்கள் வசிக்கும் பகுதி வழியாக குப்பைகள் எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து மறியல்
x

பேரணாம்பட்டில் மக்கள் வசிக்கும் பகுதி வழியாக குப்பைகள் எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடந்தது.

வேலூர்

பேரணாம்பட்டில் மக்கள் வசிக்கும் பகுதி வழியாக குப்பைகள் எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடந்தது.

பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை 11-வது வார்டு சப்போட்டா தோப்பு குறுகலான ெதரு வழியாக தினமும் டிப்பர் லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு பேரணாம்பட்டு ஏரி பகுதியில் கொட்டப்படுகின்றன.

இதனால் குப்பைகள் காற்றில் பறந்து பொதுமக்கள் மீது பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் குப்பைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதி வழியாக எடுத்து செல்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் தொடர்ந்து குப்பைகள் எடுத்து செல்லப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பேரணாம்பட்டு டவுன் 4 கம்பம் பகுதியில் குப்பை கழிவுகளை ஏற்றி சென்ற டிராக்டரை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குப்பைகள் அந்த வழியாக எடுத்து செல்லப்பட மாட்டாது என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் நகராட்சி டிராக்டரை விடுவித்தனர்.


Related Tags :
Next Story