ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்


ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 9:02 PM IST)
t-max-icont-min-icon

அருமனை அருகே ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

அருமனை:

அருமனை அருகே ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அருமனை அருகே உள்ள சிதறால் ஆனிச்சம்விளை பகுதியில் வாரந்தோறும் ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டுவது வழக்கம். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், வழக்கம்போல் நேற்று காலையில் ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தர்கள் பகுதியை சோ்ந்த இந்து முன்னணி அமைப்பினர் அங்கு கூடினர். இதையடுத்து அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தலும் ஈடுபட்டனர். தகவலறிந்த அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பை சோ்ந்த மிசாசோமன் உள்பட பல தலைவர்கள் அங்கு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மிசா சோமன் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்து அருமனையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story