தூத்துக்குடியில் புறா பந்தயம்
தூத்துக்குடியில் புறா பந்தயம் நடந்தது.
தூத்துக்குடி கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில் தொழுதூர்- தூத்துக்குடி மற்றும் காஞ்சிபுரம்- தூத்துக்குடி வரையிலான வான்வழி தூர புறா பந்தயம் நடந்தது. தொழுதூர்- தூத்துக்குடி வரையிலான 300 கிலோமீட்டர் தூர கூட்டுப்புறா போட்டியில் மொத்தம் 341 புறாக்கள் பங்கேற்றன. இதில் தூத்துக்குடி விஷால் என்பவரின் புறா முதலிடமும், முத்துதுரை என்பவரின் புறா 2-வது இடமும், சைமன்ராஜ் என்பவரின் புறா 3-வது இடமும் பெற்றது.
அதில் சிறப்பாக நடத்தப்பட்ட தனிப்புறா போட்டியில் மொத்தம் 15 புறாக்கள் பங்கேற்றன. இதில் சைமன்ராஜ் என்பவரின் புறா முதலிடமும், பன்னீர்செல்வம் என்பவரின் புறா 2-வது இடமும், பாலகிருஷ்ணன் என்பவரின் புறா 3-வது இடமும் பெற்றது.
இதேபோல் காஞ்சிபுரம்- தூத்துக்குடி வரையிலான 480 கிலோமீட்டர் தூர கூட்டுப்புறா போட்டியில் மொத்தம் 340 புறாக்கள் பங்கேற்றன. இதில் தூத்துக்குடி மனோ என்பவரின் புறா முதலிடமும், பன்னீர்செல்வம் என்பவரின் புறா 2-வது மற்றும் 3-வது இடம் பிடித்தது.
இதில் சிறப்பாக நடத்தப்பட்ட தனிப்புறா போட்டியில் மொத்தம் 15 புறாக்கள் பங்கேற்றதில், மனோ என்பவரின் புறா முதலிடமும், கோபிநாத் என்பவரின் புறா 2-வது இடமும், முத்துதுரை என்பவரின் புறா 3-வது இடமும் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு தலைவர் ராஜாசிங் பரிசு வழங்கி பாராட்டினார். இதில், துணைத்தலைவர் ராஜா, செயலாளர் ஜெயபாலாஜி, துணை செயலாளர் சைமன், பொருளாளர் ராயல் தினேஷ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், மணிகண்டன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.