பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 26 பன்றிகள் பிடிக்கப்பட்டன


பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 26 பன்றிகள் பிடிக்கப்பட்டன
x

தஞ்சை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 26 பன்றிகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 26 பன்றிகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர்.

பன்றிகள் தொல்லை

தஞ்சை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பன்றிகளை பிடிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் 33-வது வார்டில் கோரிகுளம் பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றிதிரிந்த பன்றிகளை போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட கோட்ட துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் 26 பன்றிகளை பிடித்துஅப்புறப்படுத்தினர்.

சட்டப்படி நடவடிக்கை

மேலும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாதவாறு இது போன்று பன்றிகள் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. பொது மக்களுக்கு சுகாதார கேடு விளைவிக்கும் படி பன்றிகள் இந்த மாநகராட்சி எல்லைக்குள் சுற்றித்திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story