மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய பன்றிகள்


மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய பன்றிகள்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் பன்றிகள் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கருத்தபாண்டி மனைவி மேரி (வயது 38). இவர் கழுகுமலை செந்தூர்நகர் பகுதியில் கட்டு குத்தகைக்கு 4 ஏக்கர் அளவில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு வந்த பன்றிகள் பயிர்களை கடித்து சேதப்படுத்தியது. நேற்று காலையில் வந்த மேரி பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தது கண்டு கண்ணீர் விட்டு அழுதார். சேதம் அடைந்த பயிர்களின் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மனைவி மாடத்தி (55) கட்டுகுத்தகைக்கு வாங்கி பயிர் செய்திருந்த தோட்டத்திலும் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்ததில் 1 ஏக்கர் அளவிலான மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்தன. அவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் மேரி, மாடத்தி ஆகியோர் செந்தூர்நகரில் பன்றிகள் வளர்த்து வரும் நபர் மீது கழுகுமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story