பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x

கொட்டாம்பட்டி அருகே துவராபதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

மதுரை

கொட்டாம்பட்டி அருகே துவராபதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

துவராபதி அம்மன் கோவில்

கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் பிரசித்திபெற்ற துவராபதி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ஆடி திருவிழாவிற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது,

காப்பு கட்டிய பக்தர்கள் கடுமையான விரதமிருந்து வந்தனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று துவராபதி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது.

பால்குடம் ஊர்வலம்

காப்பு கட்டிய 2 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் அதிகாலையில் மணல்மேட்டுப்பட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சொக்கலிங்கபுரம் முக்கிய தெருக்கள் வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக பால்குடம் சுமந்து துவராபதி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் கிடாய் வெட்டி பொங்கலிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story