முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் உள்ள கால பைரவர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். கால பைரவரை வழிபட்டால் முன்வினை நீங்கி, பெருவாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். இந்நிலையில் நேற்று இந்த கோவிலில் முளைப்பாரிகை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் முதல் பக்தர்கள் முளைப்பாரி வளர்த்து வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை மேளதாளங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வந்தனர். கால பைரவருக்கு பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் கோவில் அருகே உள்ள திருக்குளத்தில் முளைப்பாரியை விட்டு வழிபாடு செய்தனர். பின்னர் காலபைரவரை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Related Tags :
Next Story