பழனிக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள்


பழனிக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள்
x

பழனிக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் சென்றனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மேட்டுப்பட்டி, புதுநகர் காலனி, வேளாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில் அவர்கள் பழனி யாத்திரை செல்வதற்கு முன்பாக முதலில் முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள மலைமீது அமைந்துள்ள முகைதீன் ஆண்டவர்மலை தர்காவில் சிறப்பு வழிபாடு செய்வார்கள். இந்தநிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரைக்கு செல்வதற்கு முன்பாக முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள முகைதீன் ஆண்டவர்மலை தர்காவில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து பாதயாத்திரையாக பழனிக்கு கிளம்பினர். அவர்களை அப்பகுதி முஸ்லிம்கள் பிஸ்கட், தண்ணீர் பாட்டில் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பக்தர்கள் தர்காவில் வழிபாடு நடத்தியதும் அவர்களை முஸ்லிம்கள் வழியனுப்பி வைப்பதும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


Next Story