சென்னையில் மாநகராட்சி பள்ளியில் பில்லர் இடிந்து விபத்து - போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்
சென்னை நெசப்பாக்கத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பில்லர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை நெசப்பாக்கத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பில்லர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெசப்பாக்கத்தில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளியில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் தொடர்ச்சியாக விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளிக் கட்டடத்தின் பில்லர் திடீரென்று பெயர்ந்து விழுந்துள்ளது.
மூன்று தளங்களிலும் சுவர் பூச்சும் பெயர்ந்துள்ள நிலையில், மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனிடையே பள்ளிக் கட்டடத்தின் நிலையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story