பொதுமக்கள் தர்ணா போராட்டம்.


பொதுமக்கள் தர்ணா போராட்டம்.
x

பொதுமக்கள் தர்ணா போராட்டம்.

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையத்தில் பேரூராட்சி உட்பட்ட பகுதி ராமபட்டினம். இப்பகுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், அங்கன்வாடி பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அங்கன்வாடி பள்ளி சமையலறையை ஒட்டி கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு புறக்கழிப்பிடம் கட்டப்பட்டு வருகின்றன.அங்கு கழிப்பிடம் கட்ட வேண்டாம் என பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது அவ்வாறு அப்பகுதியில் கழிப்பறை கட்டினால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.ஆகையால் பொதுக் கழிப்பறையை மாற்றக்கோரி கலெக்டரிடமும் கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவி சுதா கரூப்புசாமி ஆகியோரிடம் வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அலுவலக வளாகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Next Story