லத்துவாடியில் பிடாரியம்மன் கோவில் தேரோட்டம்


லத்துவாடியில் பிடாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

லத்துவாடியில் பிடாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

சேலம்

தலைவாசல்:

தலைவாசல் அருகே லத்துவாடி கிராமத்தில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு சக்தி அழைத்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. மேலும் பக்தர்கள் காலை 8 மணிக்கு அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாலை 6 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story