ஈரோட்டில் பரிதாபம்:சரக்கு ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி ஊழியர் பலி


ஈரோட்டில் பரிதாபம்:சரக்கு ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி ஊழியர் பலி
x

ஈரோட்டில் சரக்கு ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி ஊழியர் பலியானாா்.

ஈரோடு

ஈரோட்டில் சரக்கு ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி ரெயில்வே ஊழியர் பரிதாபமாக பலியானார்.

ரெயில்வே ஊழியர்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியை சேர்ந்தவர் அப்பல்ல ராஜு (வயது 33). திருமணம் ஆகவில்லை. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஈரோடு ரெயில் நிலையத்தில், ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு ரெயிலை மாற்றுவிடும் வேலை கிடைத்தது. இதைத்தொடர்ந்து அப்பல்ல ராஜு ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து 2 மாதங்கள் பயிற்சி பெற்றார். பயிற்சியை முடித்த பின்னர் கடந்த ஒரு மாதமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.15 மணி அளவில் ஈரோடு ரெயில் நிலையத்தின் முதல் மற்றும் 2-வது நடைமேடையில் தண்டவாளம் மாற்றும் பணியில் அப்பல்ல ராஜு ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது 2 வழித்தட தண்டவாளங்களிலும் சரக்கு ெரயில்கள் சென்று கொண்டிருந்தன.

உடல் துண்டாகி பலி

இந்த சமயத்தில் அப்பல்ல ராஜு எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார். இதனால் தண்டவாளத்தில் சென்று கொண்டு இருந்த சரக்கு ரெயிலின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் துண்டாகி ரத்த வெள்ளத்தில் அப்பல்ல ராஜு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் இதுகுறித்து, ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பல்ல ராஜுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் மோதி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story