அம்மாபேட்டை அருகே பரிதாபம் மகன் இறந்த துயரத்தில் தாய் தற்கொலை
தாய் தற்கொலை
அம்மாபேட்டை அருகே மகன் இறந்த துயரத்தில் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மகன் இறந்த துக்கம்
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கோவிலூரை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 72). இவருடைய மகன் பழனிச்சாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
சின்னம்மாள் மகன் பழனிச்சாமி இறந்த துயரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 23-ந் தேதி அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி குள்ளனூரில் வசிக்கும் தனது மகள் ஜோதிலட்சுமி (45) வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது அவரிடம் சின்னம்மாள், இறந்த பழனிச்சாமி ஞாபகமாகவே உள்ளதாக கூறி வேதனைப்பட்டுள்ளார். அவருக்கு ஜோதிலட்சுமி ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
தாய் தற்கொலை
இந்தநிலையில் சின்னம்மாள் நேற்று முன்தினம் கோவிலூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார். அவர் பூதப்பாடி அருகே உள்ள வாய்க்கால் கரையில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே ஜோதிலட்சுமி, அவரது மகன் ஆகியோர் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் சின்னம்மாளை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் சின்னமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்