பவானி அருகே பரிதாபம் தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்த 1½ வயது ஆண் குழந்தை சாவு


பவானி அருகே பரிதாபம்  தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்த  1½ வயது ஆண் குழந்தை  சாவு
x

1½ வயது ஆண் குழந்தை சாவு

ஈரோடு

பவானி அருகே விளையாடி கொண்டிருந்தபோது பாத்திரத்தில் தவறி விழுந்த 1½ வயது ஆண் பரிதாபமாக இறந்தது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த எலவமலை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவா் முருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு ஸ்ரீணேஷ் என்ற 1½ வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை ரேவதி வழக்கம்போல் வீட்டுக்குள் சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது வீட்டின் வெளியே உள்ள வாசலில் பாத்திரங்கள் கழுவுவதற்காக பெரிய பாத்திரம் ஒன்றில் தண்ணீா் நிரப்பி வைத்திருந்தார்.

பாத்திரத்தில் தவறி...

நடை பழகிய குழந்தை என்பதால் ஸ்ரீணேஷ் வீட்டின் வெளிப்பகுதியில் அங்கும் இங்குமாக நடந்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராவிதமாக அங்கு தண்ணீர் நிரப்பி வைத்திருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துவிட்டான். இதில் அவன் தண்ணீரில் மூழ்கினான். இதை ரேவதி அறியவில்லை. இதனிடையே குழந்தையின் சத்தம் கேட்காததால் சந்தேகம் அடைந்த ரேவதி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்து உள்ளார். அப்போது அங்குள்ள பாத்திரத்தில் குழந்தை மூழ்கி கிடந்ததை கண்டதும் கதறி துடித்து அழுதார்.

சாவு

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன், குழந்தை ஸ்ரீணேசை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை ெசய்த டாக்டர்கள் குழந்தை ஸ்ரீணேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விளையாடி கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story