ஈரோடு அருகே பரிதாபம்:லாரி மோதி 10-ம் வகுப்பு மாணவா் பலி
ஈரோடு அருகே லாரி மோதி 10-ம் வகுப்பு மாணவா் பலியானாா்
ஈரோடு அருகே லாரி மோதி 10-ம் வகுப்பு மாணவா் பலியானார்.
10-ம் வகுப்பு மாணவா்
ஈரோடு அருகே உள்ள சோலார் கஸ்பாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட கள்ளக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். அவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகன்கள் ரித்தீஷ் (வயது 18), ஜீவா (16). கஸ்பாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரித்தீஷ் பிளஸ்-2 வகுப்பும், ஜீவா 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை ஜீவா மோட்டார்சைக்கிளில் பழனி ரோட்டில் ஈரோடு நோக்கி சென்றுகொண்டு இருந்தார். இதேபோல் தனியார் பால்பண்ணைக்கு சொந்தமான லாரி அவல்பூந்துறைக்கு சென்றுகொண்டு இருந்தது. போக்குவரத்து நகர் அருகே சென்றபோது லாரியும், மோட்டார்சைக்கிளும் கண்இமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன.
பலி
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜீவாவின் தலைமீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவா் ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.