ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
ஆலடி அருணா கல்வி குழுமம் சார்பில் சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் மதிவாணன், கல்லூரி செயலாளர் எழில்வாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் வேலாயுதம், ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை ப்ளு ஓசியன் மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மேலாளர் ராம்கி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
முகாமில் பல்வேறு துறைகளில் இருந்து 30 நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை வழங்கின. 1,250 இளைஞர்கள் முகாமில் பங்கேற்றனர். அதில் 1,000 இளைஞர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரேவதி, மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியல் துறை தலைவர் சுரேஷ் தங்ககிருஷ்ணன், கணிப்பொறியியல் துறை தலைவர் மற்றும் இதர துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.