அரசு கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்


அரசு கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி அரசு கலை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் சிறப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள் 300 பேர் கலந்து கொண்டனர். பிரபல 10 தொழில் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் திறமைகளை பரிசீலித்து 100 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான உத்தரவை வழங்கினார்கள். முகாமில் பயிற்சியாளர் வீரபாலு, வேலைவாய்ப்பு வழிகாட்டி அலுவலர் பார்த்திபன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story