வேலை வாய்ப்பு முகாம் ஆலோசனை கூட்டம்
வேலை வாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கல்லூரியில் வருகிற 28-ந் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள கல்லூரியில் நேற்று முகாம் குறித்தும் வேலைவாய்ப்பு முகாமில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேலை வாய்ப்பு முகாமில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Related Tags :
Next Story