வேலை வாய்ப்பு நிகழ்ச்சி
வேலை வாய்ப்பு நிகழ்ச்சி நடந்தது.
மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் அரசனூரில் உள்ள பாண்டியன் சரஸ்வதி யாதவ் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா வரவேற்றார். பி.எஸ்.ஒய். கல்வி குழும நிறுவனர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார். தொடர்ந்து 2021-2022-ம் கல்வியாண்டில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் நடந்த வேலைவாய்ப்பு போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 100-க்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் வைரமுத்து ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பழனிசாமி, முருகன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர்கள் வைரமுத்து, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.