கோவில்பட்டி பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
கோவில்பட்டி பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி, நக்கலமுத்தன்பட்டி, விஜயாபுரி, எட்டயபுரம், எம்.துரைச்சாமிபுரம், கழுகுமலை, அய்யனாரூத்து, கடம்பூர் எப்போதும் வென்றான் ஆகிய உபமின் நிலைய பகுதிகளில் சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின்பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோவில்பட்டி மெயின் ரோடு பத்மா மருத்துவமனை முதல் ஏ.கே.எஸ். தியேட்டர் ரோடு வரை உள்ள பகுதிகள், முத்தானந்தபுரம் தெரு, ஆவல்நத்தம், கிழவிபட்டி, கெச்சிலாபுரம், துரைச்சாமி புரம், செண்பகப்பேரி, குருமலை, வெங்கடாசலபுரம் கழுகாசலபுரம், மும்மலைபட்டி, பாறைப்பட்டி, புதூர், லிங்கம்பட்டி, சென்னையம்பட்டி, பெருமாள்பட்டி, சமத்துவபுரம், சீனி வெள்ளாளபுரம், வாகைத்தாவூர், கூழைத்தேவன்பட்டி, வேலாயுதபுரம், வள்ளிநாயகபுரம், ஆத்திகுளம், மானங்காத்தான், ராமலிங்கபுரம், கீழமங்கலம், மேலமங்கலம், குப்பனாபுரம், டி.சண்முகபுரம், ஆத்திக்கிணறு, பி.சண்முகபுரம், சீல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்து உள்ளார்.