திருச்செந்தூர் கோட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள்


திருச்செந்தூர் கோட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள்
x

திருச்செந்தூர் கோட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்வினியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகளை சரிசெய்தல் போன்ற பணிகள் வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கின்றன.

எனவே வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணாநகர், குறிஞ்சிநகர், காயல்பட்டினம் ரோடு, சீருடையார்புரம் செட்டிவிளை, சோலைகுடியிருப்பு, மானாடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, வட்டன்விளை, குருநாதபுரம், சீருடையார்புரம், பரமன்குறிச்சி, அருணாசலபுரம், கொம்புத்துறை, கொளுவைநல்லூர், அண்ணாநகர், அங்கமங்களம், சண்முகபுரம், சிறப்பூர், விஜயராகவபுரம், சாமிதோப்பு, அடப்புவிளை, பொத்தகாலன்விளை, செட்டிகுளம், நொச்சிக்குளம், இளமால்விளை, சமத்துவபுரம், பிடாநேரி, ஆழ்வார்திருநகரி, அப்பன்கோவில், வரதராஜபுரம், மெஞ்ஞானபுரம், செம்மறிக்குளம், நங்கைமொழி, லட்சுமிபுரம், எழுவரைமுக்கி, ஜெ.ஜெ.நகர், காலன்குடியிருப்பு, குலசை பைபாஸ் ரோடு, செட்டியாபத்து, தாங்கையூர், பூலையன்குடியிருப்பு, வாத்தியார்குடியிருப்பு, உடைபிறப்பு, இடைச்சிவிளை, பூச்சிக்காடு, பிரகாசபுரம் போன்ற பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை, திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர்‌ விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story