திருச்செந்தூர்கோட்டத்தில் திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
திருச்செந்தூர்கோட்டத்தில் திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு, முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் சரிசெய்தல் போன்ற பணிகள் நாளை(திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட இருக்கிறது.
எனவே, தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர்காலனி, சண்முகாபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணாநகர், குமாரபுரம், காயாமொழி, சங்கிவிளை, ஜெயந்திநகர், தண்டுபத்து, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், நா. முத்தையாபுரம், நடு நாலுமூலைக்கிணறு, பிச்சிவிளை, பரமன்குறிச்சி, மானாடு, செட்டிவிளை, சோலைகுடியிருப்புதைக்காவூர், சீர்காட்சி, நைனாபத்து, மங்களவாடி, சுனாமிநகர், தேங்காய்பண்டகசாலை, வடக்கு காயல்பட்டணம், உப்பளபகுதி, வேப்பங்காடு, ராமசாமிபுரம், வீரவநல்லுர், வாவிவிளை, சுப்புராயபுரம், நரையன்குடியிருப்பு, ஆலங்கரை, சங்கரன்குடியிருப்பு, தஞ்சைநகரம், தேர்க்கன்குளம், அறிவான்மொழி, சின்னமாடன்குடியிருப்பு, வகுத்தான்குப்பம், வெள்ளமடம், தோப்பூர், எழுவரைமுக்கி, மாணிக்கபுரம், அடைக்கலாபுரம், கொட்டங்காடு, சிவலுர், புதுமனை ஆகிய பகுதிகளிலும்,
குலசை, மணப்பாடு, வெள்ளிகுடியிருப்பு, பண்டாரஞ்செட்டிவிளை, பிரகாசபுரம், பூச்சிக்காடு, இடைச்சிவிளை, உடைபிறப்பு, கடகுளம், செட்டியாபத்து, வாத்தியார்குடியிருப்பு, குலையன்குண்டு, படுக்கப்பத்து, உதிரமாடன்குடியிருப்பு, மறக்குடி, பிச்சிவிளை, அழகப்பபுரம், எள்ளுவிளை ஆகிய பகுதிகளில் நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
இந்த தகவலை திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.