தூத்துக்குடியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி பீச் ரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் இனிகோநகர், ரோச்காலனி, சகாயபுரம், மினிசகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள உப்பள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.


Next Story