தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே உள்ள கொம்புக்காரநத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதனால் வடக்கு காரசேரி, காசிலிங்காபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், ராமசாமிபுரம், புதூர், செட்டியூரணி, கல்லன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story