வியாழக்கிழமை மின் தடை ஏற்படும் இடங்கள்


வியாழக்கிழமை மின் தடை ஏற்படும் இடங்கள்
x

தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் வியாழக்கிழமை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் நாளை(வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை

குளத்தூர் மின்விநியோக பிரிவுக்கு உட்பட்ட சந்திரகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகள், புதுக்கோட்டை மின் விநியோகப்பிரிவுக்கு உட்பட்ட அரசு நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பெட்ரோல் நிலைய பகுதிகளிலும். சாயர்புரம் மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட ராமசாமிபுரம், கண்ணாண்டிவிளை, வளசக்காரன்விளை, வன்னியனூர், பங்களாபகுதிகளிலும், வல்லநாடு மின் விநியோகப்பிரிவுக்கு உட்பட்ட கலியாவூர், தலைமை நீரேற்றும் நிலையம், கீழவல்லநாடு குடிநீர் சுத்தகரிப்பு மையம், திருவேங்கடநாதபுரம் சுற்றியுள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும், பழையகாயல் மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட மணிநகர், ராமச்சந்திராபுரம், முக்காணி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டணம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம, ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ண நகர், திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டிணம், வ.உ.சி. நகர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம், கஸ்பா, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, கடையனோடை, கேம்பலாபாத், தேமான்குளம், திருக்களுர் ஆகிய ஊர்களுக்கு மின்சாரம் வினியோகம் இருக்காது.

செட்டியாபத்து

அதேபோல், திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட நாசரேத், சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, விஜயராமபுரம், செட்டிகுளம், திருவரங்கநேரி, கொச்சிக்குளம், இளமால்குளம், பேய்க்குளம், பனைகுளம், திருமறையூர், மார்க்கெட் ரோடு, திரவியபுரம், வடலிவிளை, தோப்பூர், ஏழுவரைமுக்கி, உடன்குடி, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, சுண்டங்கோட்டை, உடைபிறப்பு, கருமாவிளை, படுக்கப்பத்து, அழகப்பபுரம், பிச்சிவிளை, வெயிலுகந்தம்மன்புரம், பூச்சிக்காடு ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story