நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
பட்டீஸ்வரம், ஆடுதுறை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம்:
பட்டீஸ்வரம், ஆடுதுறை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மின் நிறுத்தம்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் நகர உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியில் உள்ள துணைமின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளாக கும்பகோணம் நகர் தவிர உமாமகேஸ்வரபுரம், கோ.சி. மணி நகர், தாராசுரம், எலுமிச்சங்காய் பாளையம், அண்ணல் அக்ரஹாரம், திப்பிராஜபுரம், அரியத்திடல், சிவபுரம், உடையாளூர், சுந்தரபெருமாள் கோவில், நாச்சியார்கோவில், திருநாகேஸ்வரம், முருக்கங்குடி, அய்யாவாடி, புதூர், ஆவணியாபுரம், திருநீலக்குடி, பட்டீஸ்வரம், வலங்கைமான், ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆடுதுறை
ஆடுதுறை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளாக ஆடுதுறை, நரசிங்கம்பேட்டை, ஆவணியாபுரம், வேப்பத்தூர், திருவிடைமருதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவல் கும்பகோணம் வடக்கு கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாதவன் தெரிவித்துள்ளார்.