நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உ்ளளன.
சேலம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் மின் பகிர்மான வட்டம் அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மணக்காடு, சின்னதிருப்பதி, ஜான்சன்பேட்டை, ராமன்நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, சாந்தி நகர், அம்மன் நகர், அன்பு நகர், டி அன்ட் பி குடியிருப்பு, சந்திரா கார்டன், காமாட்சி நகர், காந்தி நகர், மகேந்திரபுரி, சின்ன முனியப்பன் கோவில், மூக்கனேரி, குமரன் நகர், சீனிவாசா நகர், லட்சுமி நகர், காயத்திரி நகர், உமா நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் உடையாப்பட்டி துணை மின்நிலையத்துக்குட்பட்ட வீராணம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செல்வநகர், கக்கன் காலனி, தொழிற்பேட்டை, அதிகாரிப்பட்டி, பிருந்தாவன் கார்டன் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எடப்பாடி மின் கோட்டம் பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பூலாம்பட்டி, கூடக்கல், பிள்ளுக்குறிச்சி, வன்னியர்நகர், வளையச்செட்டியூர், கள்ளுக்கடை, சித்தூர், குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர், பொன்னம்பாளையம் மற்றும் புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.