திருச்செந்தூர் கோட்டத்தில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
திருச்செந்தூர் கோட்டத்தில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல் சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல் தொய்வாக உள்ள மின்பாதைகளை சரிசெய்வது போன்ற பணிகள் இன்று(புதன்கிழமை) மேற்கொள்ளப்பட இருக்கிறது.
எனவே, தோப்பூர், அமலிநகர், வடக்குமாடவீதி, மேற்கு குலசை ரோடு, மெயின் பஜார், காமராஜர் சாலை, செந்தாமரைவிளை, காயாமொழி, தைக்காவூர், நைனாபத்து, சீர்காட்சி, சிங்குத்துறை, சதுக்கைதெரு, நைனாதெரு, ஆறுமுகநேரி உப்பளபகுதி, வடக்கு காயல்பட்டணம், அன்புநகர், சுந்தரராஜபுரம், சண்முகபுரம், சுப்பிரமணியபுரம், பொத்தகாளன்விளை, நரையன்குடியிருப்பு, புதுக்குளம், அறிவான்மொழி, கட்டாரிமங்களம், அகைப்பைகுளம், வாழையடி, திருமறையூர், ஆழ்வார்திருநகரி, நவலட்சுமிபுரம், நங்கைமொழி, இ.வாணியங்காவிளை, ராமசுப்பிரமணியபுரம், குலத்தெரு, நைனாபிள்ளை தெரு, உடன்குடி, பரமன்குறிச்சிரோடு, செட்டியாபத்துரோடு, சிதம்பரதெரு, கொத்துவாபள்ளி தெரு, வடகாலன்குடியிருப்பு, சுல்லாதான்புரம், பஸ் ஸ்டாண்ட் ரோடு, மாரியம்மன்கோவில் தெரு, கடாட்சபுரம், கருமாவிளை, சுண்டங்கோட்டை, அம்பாள்குளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.